become a fan on facebook  follow us on twitter  subscribe for updates  subscribe for updates


நீரிழிவு நோயைச் சமாளிப்பதற்கான உங்களுடைய பாதையை வகுத்தல்:
அடிப்படை காபோஹைட்ரேட்டை அளவிடுதலும் கிளைசெமிக் இன்டெக்ஸ்ஸும் (இரத்தத்தில் சக்கரையின் அளவு மாறுபடும் அட்டவணை)

காபோஹைட்ரேட் என்றால் என்ன?

உணவில் காணப்படும் மூன்று பிரதான ஊட்டச்சத்துக்களில் காபோஹைட்ரேட்டும் ஒன்று. மாச்சத்துக்கள், பழம், பாற்பொருட்கள், சீனி, சில மரக்கறிகள் என்பனவற்றில் காபோஹைட்ரேட் இருக்கிறது. சக்திக்காக உங்களுடைய உடலுக்கு காபோஹைட்ரேட் தேவைப்படுகிறது. உங்களுடைய உடல் அவற்றை குளுக்கோஸ் என அழைக்கப்படும் ஒரு சீனியாக உடைக்கிறது. உங்களுடைய மூளையும் உடலும் தகுந்த முறையில் வேலை செய்வதற்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது.

காபோஹைட்ரேட்டும் நீரிழிவு நோயும்

நீரிழிவு நோய்க்குக் காபோஹைட்ரேட்டின் சரியான வகைகளைச் சரியான அளவில் உட்கொள்வது முக்கியம். சில காபோஹைட்ரேட்கள் உங்களுடைய இரத்தக் குளுக்கோஸை அதி விரைவாக அதிகரிக்கச் செய்யும். மற்றவை உங்களுடைய இரத்தக் குளுக்கோஸை மெதுவாகவும் மிகக் குறைந்த அளவிலும் அதிகரிக்கச் செய்யும்.